உயிருக்குப் போராடிய 77 வயது முதியவர்: 24 மணி நேரத்தில் மீட்டது ‘தி இந்து’

By இ.மணிகண்டன்

உறவுகள் ஒதுக்கியதால் உணவின்றி தனிமையில் உயிருக்குப் போராடிய 77 வயது முதியவரை அரசு அதிகாரிகள் உதவியுடன் 24 மணி நேரத்தில் மீட்டது ‘தி இந்து’.

‘தி இந்து உங்கள் குரலில் தொடர்புகொண்ட பெயர் குறிப்பிடாத வாசகர் ஒருவர், அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டியில் முதியவர் ஒருவர் உறவினர்கள் ஒதுக்கியதால் உணவில்லாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு, தனிமையில் படுத்தபடுக்கையாக உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகத் தகவல் தெரிவித்தார்.

அதையடுத்து, செம்பட்டியில் சென்று விசாரித்தபோது, உடலில் பல இடங்களில் புண்கள் ஏற்பட்டு, பல நாட்களாக சரியாக சாப்பிடாததால் பேச முடியாத நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முதியவர் வெள்ளையனை கண்டறிந்தோம். உறவுகள் ஒதுக்கியதால் தனது ஒண்டுக் குடிசையில் தவித்துவரும் முதியவர் வெள்ளையனின் வயது 77. கூலித் தொழிலாளியான இவரது மனைவி தங்கபொன்னு.

இவர்களுக்கு கண்ணன் என்ற மகனும், இருவக்கால் என்ற மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக குடித்தனம் சென்றுவிட்டனர். கூலிவேலை பார்த்து, அதில் கிடைத்த சொற்ப வருவாயில் வெள்ளையனும் அவரது மனைவியும் பசியாறி வந்துள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மனைவி இறந்து விட்டார். அதன்பின், தனது மகனின் ஆதரவில் வெள்ளையன் இருந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன் மகன் கண்ணனும் தற்கொலை செய்துகொண்டதால் வெள்ளையன் தனி மரமானார்.

அவ்வப்போது, மருமகள் கொடுக்கும் உணவை, பல நாட்களாக வைத்து சாப்பிட்டு உயிர் வாழ்ந்துவரும் முதியவர் வெள்ளையனுக்கு, தற்போது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. உறவுகள் ஒதுக்கியதால், பல நாட்களாக உணவின்றி படுத்த படுக்கையாகக் கிடப்பதால் உடல் மெலிந்து பல இடங்களில் புண்களும் ஏற்பட்டுள்ளன. பராமரிக்க ஆள் இல் லாததாலும், உணவு கொடுத்து உதவ யாரும் முன்வராததாலும், உயிருக்குப் போராடிய முதியவர் வெள்ளையனின் அவல நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமனுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. ஆட்சியர் உடனடியாக அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் சுபாநந்தினி, வட்டாட்சியர் ரெங்கசாமி, மாவட்ட சமூகநலத் துறை அலுவலர் பாண்டியம்மாள் ஆகி யோரைத் தொடர்புகொண்டு, முதியவர் வெள்ளையனை உடனே மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கவும், உடல்நிலை சரியானதும் முதியோர் காப்பகத்தில் சேர்க் கவும் உத்தரவிட்டார்.

அதையடுத்து, வட்டாட்சியர் ரெங்கசாமி, சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பஞ்சவர்ணம், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் வாழ்வாங்கி முதியோர் காப்பக நிர்வாகிகள் செம்பட்டி சென்று, முதியவர் வெள்ளையனை மீட்டு வாழ்வாங்கி முதியோர் இல்லத்தில் சேர்த்து அரசு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்து வருகின்றனர். உறவினர்களும், அருகில் வசிப்பவர்களும் முதியவரை காப்பாற்ற முன்வராத சூழ்நிலையில், அரசு அதிகாரிகள் மூலம் முதியவரை மீட்டு உயிர் கொடுத்த ‘தி இந்து’ நாளிதழுக்கு செம்பட்டி பகுதி வாசகர்கள் நன்றி தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்