மீனவர்கள் பிரச்சனையைத் தீர்க்க இலங்கை அதிபரை சந்திக்க தமிழக முதல்வருக்கு சுப்பிரமணியன் சுவாமி யோசனை

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்வதால் அதற்கு தீர்வு காண கொழும்பு சென்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சேவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசவேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.

இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம்:

யாழ்ப்பாணத்தில் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்களை பிடிப்பதாக அங்குள்ள தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே யாழ்ப்பாணத்துக்கும் ஜெயலலிதா செல்லவேண்டும் .

மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள சர்வதேச கடல் எல்லைக்கோட்டையும் அத்து மீறி தாண்டி இந்திய மீனவர்கள் செல்கின்றனர் என்று தெரிவித்துள்ளார் சுவாமி.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிச்சென்று மீன் பிடித்ததாக கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட தனிப்பட்ட முறையில் தலையிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ள நிலையில் சுவாமி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE