சிவகங்கை நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை செய்தனர். இதில் கணக்கில் வராத ரூ.1 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகம் உள்ளது. இங்கு துணை இயக்குநராக நாகராஜன் பணிபுரிந்து வருகிறார்.
இந்த அலுவலகத்தில் லேஅவுட் அனுமதி பெறுவதற்கு கூடுதல் பணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார் எழுந்தது.
இந்நிலையில் இன்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கருப்பையா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குமாரவேல், சந்திரன், எஸ்ஐ ராஜாமுகமது உள்ளிட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்.
போலீஸார் அலுவலகத்திற்குள் நுழைந்ததும், உள்ளே இருந்தோரை வெளியே செல்லவிடாமல் கதவைப் பூட்டினர். தொடர்ந்து அவர்களிடமிருந்து மொபைல்களையும் பறித்து கொண்டனர்.
தொடர்ந்து துணை இயக்குநர் மற்றும் ஊழியர்களின் இருக்கைகளில் சோதனையிட்டனர்.
இதில் துணை இயக்குநர் அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சம் இருப்பது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து இரவு வரை விசாரணை நடத்தினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago