திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்குட்பட்ட செங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற வாரச்சந்தையில் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் சிவசங்கரன் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
கடந்த 2016 சட்டசபை தொகுதியில் நத்தம் தொகுதியில் போட்டியிட்ட சிவசங்கரனை, மீண்டும் 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட நாம்தமிழர் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.
நத்தம் தொகுதிக்கான வேட்பாளரை கட்சித் தலைமை அறிவித்துள்ள நிலையில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி மக்களை சந்தித்துவருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சிவசங்கரன் போட்டியிடுகிறார்.
» முதல் நாள் வெற்றி; முழுவதும் தொடரும்: கிராமசபைக் கூட்டம் குறித்து ஸ்டாலின் கடிதம்
» அழகிரி தனிக் கட்சி ஆரம்பித்தாலும் திமுகவுக்கு பாதிப்பில்லை: கனிமொழி எம்.பி
நத்தம் தொகுதிக்குட்பட்ட செங்குறிச்சி, குரும்பபட்டி வாரச்சந்தையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிவசங்கரன் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
சந்தையில் வியாபாரம் செய்யும் சிறுவியாபாரிகள், சந்தைக்குப் பொருட்கள் வாங்க வந்த சுற்றுப்புற கிராமமக்கள் ஆகியோரிடம் துண்டுபிரசுரங்கள் கொடுத்து அவர் ஆதரவு திரட்டினார்.
நத்தம் தொகுதிக்குட்பட்ட கிராமப்பகுதிகளில் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago