ஆண்மை நீக்கம் தண்டனைக்கு பரிந்துரைக்க காரணமாக இருந்த பாலியல் வழக்கின் பின்னணி என்ன?

By கி.மகாராஜன்

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கம் செய்வதற்கு தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படுவதற்கு காரணமான நெல்லை சிறுவனின் வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

‘குழந்தைகளுக்கு எதிரான பாலி யல் வன்முறைகளில் ஈடுபடுவோ ருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மைத் தன்மையை நீக்கம் செய்ய வேண்டும். இது தொடர்பாக சட்டம் கொண்டுவருவது தொடர் பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என பரபரப்பாக தீர்ப்பு வழங்கியுள்ளார் உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன். இந்தத் தீர்ப்பு குறித்து நாடு முழுவதும் பரபரப்பான விவாதங்கள் நடை பெற்று வருகின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவனை உயர்கல்வி படிக்க வைப்பதாகக் கூறி பல்வேறு மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று தகாத உறவு கொண்டதாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தான் மேற்கண்ட தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார்.

இந்த வழக்கு குறித்து போலீஸார் கூறியதாவது:

நெல்லையை சேர்ந்த 15 வயது சிறுவன் தந்தை இறந்தபிறகு, 2 சகோதரிகள் மற்றும் தாயுடன் வசித்துவந்தார். வறுமை காரணமாக சிறுவனை, நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகில் உள்ள சின்னம்மாள்புரம் காப்பகத்தில் சேர்த்தனர். அங்கிருந்தபடியே வள்ளியூரில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

சிறுவன் தங்கியிருந்த காப்ப கத்தை நடத்தி வந்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜொனாத்தன் ராபின்சன். இவர் ஆண்டுக்கு இரு முறை இங்கிலாந்தில் இருந்து சின்னம்மாள்புரத்துக்கு வந்து 10 முதல் 15 நாள் தங்கியிருந்துவிட்டு செல்வது வழக்கம். காப்பகத்தில் தங்கியிருக்கும்போது சிறுவர்களை உதவிக்காக வைத்துக்கொள்வார்.

இந்தநிலையில்தான் அந்த சிறு வனை வட மாநிலங்களுக்கு அழைத் துச் சென்று படிக்க வைப்பதாக அவரது தாயாரிடம் ராபின்சன் தெரிவித்துள்ளார்.

பின்னர் சிறுவனை 13.4.2011-ம் தேதி டெல்லிக்கு அழைத்துச் சென்றார். 15.4.2011-ல் டில்லி ஒய்எம்சிஏ டூரிஸ்ட் ஹாஸ்டலிலும், 17.4.2011 முதல் 20.4.2011 வரை சிம்லாவிலும் சிறுவனுடன் தங்கி யுள்ளார். அந்த நாட்களில் இரவு நேரங்களில் சிறுவனுடன் தவறாக நடக்க முயன்றுள்ளார். பின்னர் ராபின்சன் லண்டன் சென்றுவிட்டார். சிறுவனை சிலர் டெல்லிக்கும், அங்கிருந்து ரயிலில் சென்னைக்கும் அனுப்பி வைத்த னர். சின்னம்மாள்புரத்துக்கு சிறுவன் திரும்பியதும் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

பெங்களூரைச் சேர்ந்த ஜஸ்டிஸ் அன்ட் கேர் நிறுவனத்தினர் அந்தச் சிறுவனை மீட்டு போலீஸில் புகார் அளிக்கச் செய்தனர். அந்தப் புகாரின் பேரில் ராபின்சன் மீது வள்ளியூர் போலீஸார் இ.பி.கோ 342, 363, 368, 377 உடன் சேர்ந்த 511 மற்றும் சிறார் சட்டம் 23-வது பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராபின்சன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் பாலியல் குற்றங்களுக்கு முடிவு கட்டும் விதமாக ஆண்மையை நீக்கும் தண்டனை வழங்க பரிந் துரை செய்திருப்பதால் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றுள் ளது. இதனால் வள்ளியூர் நீதிமன் றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் விசாரணை முடிவை அறிந்துகொள்வதில் பெரிய அள வில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வெளிநாட்டினர் அடிக்கடி வருவது ஏன்?

வெளிநாட்டினர் பலர் அறக்கட்டளைகள் மூலம் தமிழகத்தில் காப்பகங்கள் நடத்தி வருகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை வெளிநாட்டினர் காப்பகங்களுக்கு நேரில் சென்று சில நாட்கள் அங்கேயே தங்கிச் செல்கின்றனர். அப்போது காப்பகத்தில் உள்ள குழந்தைகளை தங்களது சொந்த வேலைக்கு பயன்படுத்துகின்றனர்.

சேவையை புறந்தள்ளி, வருமானத்தை மட்டுமே நோக்கமாகக்கொண்டு சில காப்பக நிர்வாகிகள் செயல்படுகின்றனர். இவர்கள் வெளிநாட்டினரை தங்கள் நிறுவன முதலாளிகளைப்போல் கருதுவதால், சிறுவர்கள் சொந்த வேலை செய்வதை தடுப்பதற்குப் பதிலாக ஊக்கப்படுத்துகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் குழந்தைகள் தத்தெடுப்பு தொடர்பான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தபோது மாநிலம் முழுவதும் காப்பகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் உள்ள சில காப்பகங்களில் மாவட்ட சமூக நல அலுவலர்கள் சோதனையிட்டபோது, காப்பகங்களில் சிறுவர், சிறுமிகள் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யப்பட்டது தெரியவந்தது. அவர்கள் மீட்கப்பட்டு சென்னையில் உள்ள மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவங்களால் பெற்றோர்கள் மட்டுமின்றி, சிறுவர்களும் ஓரளவு விழிப்புணர்வு பெற்றனர். இத்தகைய சூழலில்தான் இந்த சம்பவமும் நடந்ததால் பிரச்சினை உடனே வெளிச்சத்துக்கு வந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்