தேசிய விவசாயிகள் தினமான இன்று, 'விவசாயிகள் விரும்பாத 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுகிறேன்' என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து, நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 23) வெளியிட்ட அறிக்கை:
"நமது நாட்டில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும், தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துகளை, திமுகவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
விவசாயிகளின் நலமான வாழ்வும், இந்த நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கான வளமான விவசாயமும் எப்போதும் ஒளிமிகு எதிர்காலமாகத் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தியது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், 7,000 கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுபடி, உழவர் சந்தைகள், வேளாண் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்தது போன்றவற்றை பல்வேறு சாதனைகளை நடத்திக் காட்டிய திமுக, என்றென்றும் விவசாயிகளின் நலனுக்காகவும் வேளாண் முன்னேற்றத்திற்காகவும் விவசாயிகளின் உற்ற துணையாக இருந்து, தோளோடு தோள் நின்று போராடும்.
பிரதமராகவும் விவசாயத் துறை அமைச்சராகவும் இருந்து விவசாயிகளுக்குப் பெரும் நன்மைகளைச் செய்து மறைந்த சரண்சிங் பிறந்த நாள்தான் இன்று, தேசிய விவசாயிகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தில் டெல்லியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது, மத்திய பாஜக அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து அனைத்து மாநில விவசாயிகளும் டெல்லியில் திட சித்தத்துடன் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
'விவசாயிகள் விரும்பாத இந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுகிறேன்' என்று இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து, விவசாயிகளை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி, இந்த நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தைக் காப்பாற்றிப் பாதுகாத்திடப் பிரதமர், எவ்விதத் தயக்கமும் இன்றி முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்".
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
7 hours ago