ஆளும்கட்சி எதைச் செய்தாலும் எதிர்க்கட்சிகள் குறை சொல்வதையே வழக்கமாக வைத்துள்ளன: அமைச்சர் ஜி.பாஸ்கரன் குற்றச்சாட்டு

By இ.ஜெகநாதன்

‘‘ஆளும்கட்சி எதைச் செய்தாலும் எதிர்க்கட்சிகள் குறை சொல்வதையே வழக்கமாக வைத்துள்ளன,’’ என கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் குற்றம்சாட்டினார்.

சிவகங்கை பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தில் ஆதரவற்ற மன நோயாளிகளுக்கான மனநல காப்பகம் திறப்பு விழா நடந்தது. அமைச்சர் ஜி.பாஸ்கரன் காப்பகத்தை திறந்து வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, எம்எல்ஏ நாகராஜன், மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதார துணை இயக்குநர் யசோதாமணி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜா, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கருணாகரன், சசிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவிற்குப் பிறகு அமைச்சர் ஜி.பாஸ்கரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அம்மா மினி கிளினிக்குகள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. கிராமங்களில் மாமியார், மாமனாரை மருமகள் வெளியில் விரட்டி விடுகின்றனர். இதனால் முதியோர் மனநிலை பாதிக்கப்பட்டு உணவுக்காக வீதிகளில் அழைக்கின்றனர். அவர்களைப் போன்றோர்களுக்காக காப்பகம் திறந்துள்ளோம்.

பொங்கலுக்கு ரூ.2,500 கொடுப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார். அதை எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன. ஆளும்கட்சி எதைச் செய்தாலும் எதிர்க்கட்சிகள் குறை சொல்வதையே வழக்கமாக கொண்டுள்ளன.

ஸ்டாலின் ஊழலைப் பற்றி பேசுகிறார். ஆனால் அவர்களது ஊழலை அடிக்கிக் கொண்டே போகலாம். எங்களுக்கு எம்ஜிஆர்-ஐ தெரியாது என கமல் கூறியுள்ளார். நாங்கள் அதிமுகவின் அடிமட்டத் தொண்டராக இருந்து படிப்படியாக உயர்ந்து வந்துள்ளோம்.

யாரும் திடீரென்று கட்சிக்கு வரவில்லை. மேலும் நாங்கள் வாரிசு அரசியலும் செய்யவில்லை. நேற்று, இன்று கட்சி தொடங்கியவர்கள் கூறுவதைப் போன்று தான் ஸ்டாலின் 200 இடங்கள் இலக்கு என்று கூறுவது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்