அரசு மருத்துவமனையில் தவறுதலாக எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு சத்தான உணவு சாப்பிட மாதம் ரூ.7500 வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு 2018-ல் தவறுதலாக எச்ஐவி தொற்று ரத்தம் செலுத்தப்பட்டது. சிவகாசி அரசு மருத்துவமனையில் தானமாகப் பெற்ற ரத்ததத்தை முறையாக பரிசோதிக்காமல் அந்தப் பெண்ணுக்கு ஏற்றியது தெரியவந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2019 ஜனவரியில் அப்பெண்ணுக்கு எச்ஐவி பாதிப்பு இல்லாத பெண் குழந்தை பிறந்தது.
பின்னர், அந்தப் பெண்ணுக்கு அரசு வேலை, ரூ.25 லட்சம் இழப்பீடு, 450 சதுர அடிக்கு குறையாமல் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு, இரு சக்கர வாகனம், வீட்டிற்கு தனியாக குடிநீர் இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்தப் பெண் காணொலி காட்சியில் நீதிபதிகள் முன்பு ஆஜரானார்.
பின்னர் அப்பெண்ணுக்கு சத்தான உணவு சாப்பிடுவதற்காக மாதம் ரூ. 7,500 வழங்கவும், தற்போது அப்பெண் அலுவலக உதவியாளர் பணியில் உள்ளார். அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப இளநிலைப் பணியாளர் பணி வழங்குவது தொடர்பாக அரசு நாளை பதிலளிக்க உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago