திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
திருநெல்வேலி சந்திப்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அவர், காலை 9 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலைய மறுகட்டமைப்பு பணிகளை பார்வையிடுகிறார்.
காலை 10.30 மணிக்கு கங்கைகொண்டானில் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கும் அவர், 11.30 மணிக்கு வண்ணார்பேட்டை பகுதியில் சலவை தொழிலாளர்களுடன் சந்தித்து உரையாடுகிறார்.
பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு மதிதா மேல்நிலைப்பள்ளியில் கல்வியாளர்களையும், மாலை 4.30 மணிக்கு அருகன்குளம் கிராமத்தில் மக்களையும் சந்திக்கிறார்.
» பொருட்களை எடுக்க இளையராஜாவை அனுமதிக்க முடியாது: பிரசாத் ஸ்டுடியோ தரப்பு உயர் நீதிமன்றத்தில் பதில்
மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் தூய்மை பணியாளர்களையும், இரவு 7.15 மணிக்கு பெருமாள்புரம் பகுதி மக்களையும் சந்திக்கிறார். இரவு 8 மணிக்கு மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.
சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் கனிமொழி நாளை நெல்லையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 secs ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago