கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு; விழுப்புரம் மாவட்டத்தில் 850 ஏரிகள் நிரம்பின: வீடூர் அணையில் 1,200 கனஅடி நீர் வெளியேற்றம்

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை யால் 860 ஏரிகள் நிரம்பியுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்தசில வாரங்களாக பெய்து வரும்பலத்த மழையின் காரணமாக, ஆறுகளில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடுகிறது. ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நேற்றும், நேற்று முன் தினமும் 2 நாட்களில் சராசரியாக 95.68 மி.மீமழை பெய்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள1,285 ஏரிகளில் 860 ஏரிகள் முழுமையாகவும், 337 ஏரிகள் 75 சதவீதமும், 75 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன. இதில் ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில்உள்ள 779 ஏரிகளில் 548 ஏரிகள் 100 சதவீதமும், 205 ஏரிகள் 75 சதவீதமும், 26 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட் டில் உள்ள 506 ஏரிகளில் 312ஏரிகள் 100 சதவீதமும், 132 ஏரிகள்75 சதவீதமும், 49 ஏரிகள் 50 சத வீதமும், 11 ஏரிகள் 25 சதவீதமும், 2 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாகவும் நிரம்பியுள்ளன. இதில் 2 நாள் மழையில் மட்டும் மாவட்டத்தில் 265 ஏரிகள் நிரம்பியுள்ளது குறிப் பிடத்தக்கது.

இதேபோல் வீடூர் அணையும் முழுமையாக நிரம்பி உபரி நீர் விநாடிக்கு 1,200 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.மழை வெள்ளத்தால் நீர்நிலைகள் நிரம்பி வருவதால் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் இந்தாண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவாய்ப்பில்லை என ஊரக வளர்ச்சித் துறையினர் தெரிவிக்கின்றனர்.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி மழையளவு(மில்லி மீட்டரில்), விழுப்புரம்- 26, கோலியனூர்-5, கெடார்- 12, வானூர்-36, திண்டி வனம்- 3, மணம்பூண்டி- 27, திருவெண்ணைநல்லூர்- 3,வளத்தி-1, மொத்த மழை அளவு 207 மி.மீ, சராசரியாக மழையளவு 9.86 மி.மீ பதிவாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மணிமுக்தா அணை திறக்கப்பட் டதால் அதிலிருந்து 10 ஆயிரம் கன அடி விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடுவதை அப்பகுதி மக்கள் ஆர்வத்தோடு பார்த்துச் செல்கின்றனர். 5 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மணி முக்தா ஆற்றில் பெருமளவு வெள்ளம் இந்த ஆண்டு தான் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கனமழையை தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தவும், தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்