முதல்வரும் பிக் பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று கமல் ட்வீட் செய்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், டிசம்பர் 13-ம் தேதி அன்று மதுரையில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். மதுரை, உசிலம்பட்டி, திருநெல்வேலி எனப் பல்வேறு ஊர்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். தனது பயணத்தின்போது அதிமுகவைக் கடுமையாகச் சாடினார்.
மேலும், சமீபமாகத் தனது ட்விட்டர் பதிவுகளிலும் மத்திய, மாநில அரசுகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார் கமல். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இன்று (டிசம்பர் 17) பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "70 வயதில் பிக் பாஸ் நடத்திக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்? இதைப் பார்த்தால் ஊரிலுள்ள ஒரு குடும்பம்கூட நன்றாக இருக்காது. அவரெல்லாம் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக இல்லை.
நன்றாக இருக்கும் குடும்பத்தைக் கெடுப்பதுதான் அவருடைய வேலை. அந்த டிவி தொடரைப் பார்த்தால் குழந்தைகளும் கெட்டுவிடும், நன்றாக உள்ள குடும்பமும் கெட்டுவிடும்" என்று தெரிவித்தார்.
» நெல்லையில் டிச.27-ல் சமூகநீதி நூற்றாண்டு மாநாடு: நல்லகண்ணு, உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
» செந்தில் பாலாஜி, ஜோதிமணி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
மேலும், கமல் நடிக்கும் படங்களின் கருத்துகள் உள்ளிட்டவற்றையும் கடுமையாகச் சாடி கருத்துகளைப் பதிவு செய்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக தமிழக முதல்வரின் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில் கமல் தனது ட்விட்டர் பதிவில், "முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago