இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

By எஸ்.முஹம்மது ராஃபி

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

நெடுந்தீவு, மன்னார் மற்றும் குதிரைமலை கடற்பகுதிகளில் தமிழகத்தைச் சார்ந்த ஐந்து விசைப்படகுகளையும் அதிலிருந்து 35 மீனவர்களையும் எல்லை தாண்டிய குற்றஞ்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியின் போது திங்கள்கிழமை மாலை கைது செய்தனர்.

இலங்கையில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மீனவர்களை விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்காமல் திருப்பி அனுப்பப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில் மீனவர்கள் 35 பேரையும் கரோனா பரிசோதனைக்குப் பின்னர் கரோனா தடுப்பு முகாம்களில் செவ்வாய்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனர்.

இரண்டு வாரம் தனிமைப்படுத்தலுக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

இந்நிலையில் செவ்வவாய்கிழமை ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளம் அருகே மீனவப் பிரதிநிதி எம்ரிட் தலைமையில் நடைபெற்ற மீனவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களதுவிசைப்படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி புதன்கிழமையிலிருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று அறிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்