பார்வை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அரசின் இணையதளங்கள், செயலிகள் அமைக்க கோரி வழக்கு: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் 

By செய்திப்பிரிவு

பார்வை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அரசின் இணையதளங்கள், செயலிகள் மாற்றியமைக்கப்படவேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய - மாநில அரசுகளை சார்ந்த பல்வேறு துறைகள், இணையதளங்கள் மூலமும், மொபைல் செயலிகள் மூலமும் சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த டிஜிட்டல் பந்தயத்தில் பங்கேற்றுள்ள தமிழக அரசும், 92 பணிகளை இ-சேவை மூலமாக மக்களுக்கு வழங்கி வருகிறது.

ஆனால் அவை மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் இல்லை என கூறி, வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில்,

“அரசுப் பணியாளர் தேர்வாணையம், இந்தியன் ரயில்வே உள்ளிட்ட இணையதளங்கள், காவல்துறையின் காவலன் உள்ளிட்ட செயலிகள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படவில்லை. தேர்வாணைய தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவும், ரயில்வே முன்பதிவு படிவங்களை பூர்த்தி செய்வதற்கும் பார்வை மாற்று திறனாளி மற்றொருவரின் உதவியை நாட வேண்டிய நிலையிலேயே இருக்கிறது.

அதனால், மத்திய - மாநில அரசுகளின் இணையதளங்களையும், மொபைல் செயலிகளையும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும்”. என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, மனுவுக்கு பிப்ரவரி 24-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்