மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து காரைக்காலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை கண்டித்தும், அவை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளதாகக் கூறியும், அவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மின் துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்தும் காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள ஜியோ நிறுவனம் முன்பு இன்று (டிச. 14) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி மாநில அரசியல் குழு செயலாளர் அரசு.வணங்காமுடி தலைமை வகித்தார். துணை செயலாளர் பொன்.செந்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார்.
இதில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.மதியழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ.வின்சென்ட், மாவட்ட செயலாளர் எஸ்.எம்.தமீம், தமுமுக மாநில செயலாளர் அப்துல் ரஹீம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் விடுதலைக்கனல் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago