கரோனா காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 4000 செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்க: அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை  

By செய்திப்பிரிவு

கரோனா காலத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி செய்த 4000 செவிலியர்களின் தற்காலிகப் பணிக்காலம் நிறைவடைவதால், கரோனா அச்சுறுத்தல் முடிவடையாத நிலையில், தேவையைக் கருத்தில் கொண்டு பணி நிரந்தரம் செய்யவேண்டும் என ஸ்டாலின், முதல்வர் பழனிசாமிக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியின் விவரம்:

“கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றிய அரசு செவிலியர்கள் 4000 பேருக்குத் தற்காலிகப் பணிக்காலம் நிறைவடைய உள்ளது.

கரோனா நோய்த் தொற்று அபாயம் முழுமையாக நீங்காத நிலையில், செவிலியர்களின் சேவை மருத்துவத் துறைக்கும் மக்களுக்கும் தேவை என்பதால் அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்