தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதியில் பருவமழையால் ஆங்காங்கே நீர்தேக்கங்கள் உருவாகி உள்ளன. இதனால் வனவிலங்குகள் நீருக்காக மலையடி வாரத்திற்கு வரும் நிலை மாறியுள்ளது. பெரியகுளம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்திற்குட்பட்ட தேவதானப்பட்டி வனச்சரகத்தால் பராமரிக்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக பரவலாக பெய்து வரும் மழையினால் வனப் பகுதியில் ஆங்காங்கே சிறிய அளவிலான நீர்தேக்கங்கள் உருவாகி உள்ளன. அடுக்கம், சாமக்காடு, பாலமலை, உள்ளிட்ட வனப்பகுதியில் தேங்கியுள்ள நீர் வனவிலங்குகளின் தாகம் தணித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் தண்ணீர் இல்லாததால் மான், குரங்கு, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் மலையடிவார கிராமங்களுக்கு வரும் நிலை இருந்தது.
தற்போது வனத்திற்குள் ஆங்காங்கே போதுமான அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. தண் ணீர் இருக்கும் பகுதியை மையப் படுத்தியே பல விலங்குகள் தங் களது அன்றாட நகர்வுகளை அமைத்துக் கொள்ளும். வனத்திற் குள்ளேபோதுமான தண்ணீர் இருப்பதால் நீரைத்தேடி மலையடி வாரத்திற்கு இடம் பெயரும் நிலை குறைந்துள்ளது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago