தமிழ்நாடு அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர் இன்று (டிச.11) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"தமிழ்நாடு அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவம் (ம) ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் 2020-21ஆம் ஆண்டுக்கு பி.எஸ்.எம்.எஸ். / பி.ஏ.எம்.எஸ். / பி.யு.எம்.எஸ். / பி.எச்.எம்.எஸ். மருத்துவப் பட்டப்படிப்புகளில் அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் மேல்நிலைப் பள்ளித் தேர்வில் அல்லது அதற்கு நிகரான தேர்வில் (அறிவியல் பாடங்கள் (ம) ஆங்கிலம் எடுத்து) தேர்ச்சி பெற்று மற்றும் 2020 மருத்துவப் பட்டப் படிப்புக்கான நீட் தேர்வு எழுதி, தேவையான தகுதி சதமான மதிப்பெண் பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை 13-12-2020 முதல் 30-12-2020 மாலை 5 மணி வரை மட்டும் எங்களது அலுவலக வலைதளமான www.tnhealth.tn.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், விவரமான வலைதள அறிவிக்கை, மேற்கண்ட படிப்புகளுக்கான அரசு மற்றும் சுயநிதி சிறுபான்மையினர் / சிறுபான்மையினரற்ற இந்திய மருத்துவம் (ம) ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளின் விவரம், தகவல் தொகுப்பேடு, பொது மற்றும் சிறப்பு விண்ணப்பப் பதிவிறக்கம் மற்றும் அவற்றின் கட்டணம், குறைந்தபட்ச சதமான மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதிமுறைகள், படிப்புகளின் விவரம், சிறப்புப் பிரிவினர், அடிப்படைத் தகுதி, கல்விக் கட்டணம் மற்றும் இதர விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பினைப் பதிவிறக்கம் செய்ய நாள்: 13-12-2020 முதல் 30-12-2020 பிற்பகல் 5 மணி வரை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் பெற கடைசி நாள்: 31-12-2020 மாலை 5.30 மணி வரை".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago