இந்து தமிழ் செய்தி எதிரொலியாக திற்பரப்பு அருவியில் 9 மாதங்களுக்குப் பின்பு சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகத்தினர் மும்முரமாக மேற்கொண்டனர்.
குமரி குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் கரோனா ஊரடங்கு தொடங்கிய மார்ச் மாதத்தில் இருந்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு நுழைவு வாயில் பகுதி அடைக்கப்பட்டது.
ஏற்கெனவே கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கான அனுமதி, விவேகானந்தர் பாறைக்கான படகு போக்குவரத்து ஆகியவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் குமரி வந்த தமிழக முதல்வர் பழனிசாமி குமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தடை நீக்கப்படுவதாகவும், அனைத்து சுற்றுலா மையங்களும் திறக்கப்படும் எனவும், படகு போக்குவரத்து தொடங்கும் எனவும் அறிவித்தார்.
இதன்படி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு விவேகானந்தர் பாறை, மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடந்து வருகிறது.
அதே நேரம் திற்பரப்பு அருவி பகுதிக்கு இதுவரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் திற்பரப்பிற்கு வந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
9 மாதங்களாக திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படாததால் அங்கு குறைந்த முதலீட்டில் வர்த்தகம் மேற்கொண்டு வரும் வியாபாரிகளும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
குமரியில் அனைத்து சுற்றுலா மையங்கள் திறந்த போதிலும் திற்பரப்பு அருவி திறக்காமல் இருப்பது குறித்தும், சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படுவது குறித்தும் கடந்த 9-ம் தேதி இந்து தமிழில் செய்தி வெளியானது.
இதைத்தொடர்ந்து திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதற்கான முன்னேற்பாடுப் பணிகள் திற்பரப்பு அருவி வளாகம், மற்றும் சுற்றுப்புறத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. 9 மாதங்களாக மக்கள் நடமாட்டம் இல்லாததால் பாசிபடர்ந்து காணப்படும் அருவிப் பகுதியில் உள்ள கான்க்ரீட் தளங்கள் பிளீச்சிங் பவுடர், மற்றும் கிருமி நாசினி போன்றவை போட்டு சுத்தப்படுத்தப்பட்டது. மேலும் அங்குள்ள சிறுவர் நீச்சல் குளம், கழிப்பறை, பூங்கா பகுதிகளில் வழுக்கும் தன்மையை நீக்கும் வகையில் சீரமைத்து முன்னேற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின்ஜோஸ் கூறுகையில்; குமரியில் உள்ள சுற்றுலா மையங்களை திறப்பதற்கு முதல்வர் அறிவித்திருந்த நிலையில், திற்பரப்பு அருவியில் மக்களை அனுமதிப்பதற்கான முறையான உத்தரவு எங்களுக்கு இதுவரை வரவில்லை.
இதனால் தான் அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதற்கான தாமதத்திற்கு காரணமாகும். இந்நிலையில் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளை விரைவில் அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள், மற்றும் பராமரிப்புப் பணிகளை பேரூராட்சி பணியாளர்கள் மூலம் மேற்கொண்டு வருகிறோம்.
அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு சமூக இடைவெளியுடன் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டுள்ளோம். இதனால் விரைவில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago