தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து நடிகர் ரஜினி அறிவிப்பார் என்று அவரது அண்ணன் சத்யநாராயணா தெரி வித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி அவரது அண்ணன் சத்யநாராயணா, திருவண்ணாமலை ஐயங்குளத் தெருவில் உள்ள அருணகிரிநாதர் கோயிலில் நேற்று சிறப்பு யாகம்நடத்தினார்.
பின்னர் சத்யநாராயணா கூறும்போது, “தம்பியின் பிறந்தநாளுக்காக சிறப்பு யாகம் நடத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறார். கட்சிதொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டதும், ரஜினிகாந்த் மீது விமர்சனம் எழுகிறது. விமர்சனம் செய்யட்டும். அனைத்துக்கும் ரஜினி, ஜனவரியில் பதில் அளிப்பார். கட்சியில் யார் யாரெல்லாம் இணைவார்கள் என்பது குறித்து தம்பி தெரிவிப்பார்.
அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில், இப்படியொரு யாகம் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படியும் எடுத்துக் கொள்ளலாம். இந்தாண்டு நாட்டுக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதில் இருந்து அனைவரும் விடுப்பட்டுமகிழ்ச்சியாக வாழ வேண்டும். ரசிகர் மன்றத்தில் உள்ளவர்கள் செய்த நற்பணிகள் அனைத்தையும் பதிவு செய்து வைத்துள்ளார். அதன்பேரில் அவர்களுக்கு பதவி உள்ளிட்ட முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
திராவிட கட்சிகளுக்கு
திராவிட கட்சிகளுக்கு கடைசிகாலம் வந்துவிட்டது. அவர்களையாரும் நம்பவில்லை. நாடே சக்தி பீடம். அதில், கடவுள் இல்லை என்கிறார்கள். எங்களுக்கு, அனைத்து மக்களும் ஒன்றுதான். ஜாதி, மத பேதம் கிடையாது. அனைவரும் மனிதர்கள். அனைவரையும் கடவுள் காப்பாற்றுவார். நல்லது செய்தால் நல்லதே நடக்கும்.
மூன்றாவது அணி அமைப்பது குறித்து ரஜினி அறிவிப்பார். திமுக, அதிமுக ஆட்சியை மாற்ற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். லஞ்சம் ஒழிய வேண்டும். கல்வி வளர வேண்டும்.
படித்தவர்கள் முன்னேற தொழில் வளர்ச்சி பெற வேண்டும். அவர், அரசியலுக்கு வருவதால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும்” என்றார். சிறப்பு யாகத்தில் சத்யநாராயணாவுடன் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர்.
இந்நிலையில் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. ரஜினி கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன், கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்அர்ஜூன மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், திராவிட கட்சிகளுக்கு இணையாக கட்சியைவலுப்படுத்த வார்டு வாரியாககுழு அமைத்து பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago