திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியரை மிரட்டிய அதிமுக நகரச் செயலாளர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியரை அதிமுக நகரச் செயலாளர் மிரட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நகர உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால் திருப்பத்தூர் பேரூராட்சியில் நடக்கும் வளர்ச்சித் திட்டப் பணிகளை அதிகரிகளே கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிலதினங்களுக்கு முன்பு, திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு அதிமுக நகரச் செயலாளர் இப்ராஹிம்ஷா தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் பணி நிமித்தமாக வெளியில் சென்றிருந்தார். இதையடுத்து அங்கிருந்த ஊழியரிடம் இப்ராஹிம்ஷா அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்தார்.

அதேபோல் அவரது ஆதரவாளர் ஒருவரும் பேரூராட்சி ஊழியரை மிரட்டும் தோரணையில் பேசினார். இதனால் ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ குறித்து பேரூராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘ வீடியோ உண்மைத் தன்மை குறித்து உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து யாரும் புகார் கொடுக்கவில்லை,’’ என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்