தேர்தலை கருத்தில் கொண்டு இல்லாத பிரச்சினைகளை இருப்பதாகக் காட்டி திமுக குழப்பம் விளைவித்து வருகிறது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.
மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேளாண் சட்டங்கள் குறித்து திமுக பொய் செய்திகளை பரப்பி வருகிறது. மக்கள் மத்தியில் தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. தேர்தலை மனதில் வைத்து திமுக இதை செய்து வருகிறது.
இதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும். திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் போன்ற தீய சக்திகளை மக்களை புறக்கணிக்க வேண்டும்.
வேளாண் சட்டங்களின் நன்மைகள் தெரியாமல் பேசுபவர்கள் முட்டாள்கள், அயோக்கியர்கள். 2ஜி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இதை நினைவில் வைத்து ஏ.ராஜா பேச வேண்டும்.
அவர் ஜனவரி 31 வரை தான் இவ்வாறு பேச முடியும். திமுக கொள்ளையர்களின் கூட்டம். திமுகவுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு எச்.ராஜா கூறினார்.
பேட்டியின் போது மதுரை மாவட்ட பாஜக தலைவர் கே.கே.சீனிவாசன், துணைத் தலைவர் ஹரிகரன், முன்னாள் தலைவர் சசிராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago