மாணவ, மாணவிகளின் மனதை பலப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்க பள்ளிகளில் ‘வெயிலோடு விளையாடி’: அரசுப் பள்ளிகளிலும் நடைமுறைக்கு வருமா?

By ஜி.ஞானவேல் முருகன்

பள்ளிகளுக்கு விடுமுறை என்றால் கம்ப்யூட்டர், டி.வி., செல்போன் என எல்லாவற்றிலும் தனிநபர் விளையாடும் கேம்ஸ்களில் மூழ்கி விடுகின்றனர் இன்றைய சிறுவர் சிறுமியர். ஓடியாடி விளையாட வேண்டிய வயதில் தனியாளாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதேநேரம் ஓடியாடி கூடி விளை யாடும் பாரம்பரிய குழு விளை யாட்டுகள் அறிவுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை, சகிப்புத் தன்மையை சிறார்கள் மத்தியில் உருவாக்கும். அத்தகைய விளை யாட்டுகளில் கில்லி, பம்பரம், தாயம், பல்லாங்குழி, சிலம்பம், பச்சைக்குதிரை, நொண்டி, நாடு பிடித்தல் உள்ளிட்ட விளையாட்டு கள் கொஞ்சம் கொஞ்ச மாக வழக்கொழிந்து வருகின்றன.

இருப்பினும் ஒரு சில கிராமங் களில் இன்றும் உயிர்ப்புடன் இருந்து வந்த பாரம்பரிய விளையாட்டு களை பின்னுக்குத் தள்ளும் வகை யில் தனிநபர் வீடியோ கேம்ஸ் புகுந்துவிட்டது. இதனால் அங்கும் பாரம்பரிய விளையாட்டுகள் அழி யும் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளன.

இந்த நிலையில், பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்கும் முயற் சியில் ஈடுபட்டுள்ளனர் திருச்சி மாவட்ட ரோட்டரி குழந்தைகள் மேம்பாட்டுப் பிரிவு குழுவினர். முதல் கட்டமாக ‘வெயிலோடு விளையாடி’ என்ற நிகழ்ச்சி வாயி லாக பள்ளி மாணவ, மாணவிய ருக்கு உடற்பயிற்சி பாடவேளை யில் இதுபோன்ற பாரம்பரிய விளையாட்டைக் கற்றுத் தருகின்ற னர். மேலும், இவற்றை விளை யாடுவதற்குத் தேவையான உப கரணங்களையும் வாங்கித் தருவது டன், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் இந்த விளையாட்டுகளில் பயிற்சி யளிக்கின்றனர்.

இதுகுறித்து இக்குழுவின் தலைவர் அல்லிராணி பாலாஜி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பள்ளி வளாகங்களில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு முக்கிய காரணம் பாரம்பரிய குழு விளையாட்டுகளை இந்த தலைமுறை குழந்தைகளுக்கு கற்பிக்காததும், தற்போது மோச மாகச் சித்தரிக்கப்படும் வீடியோ கேம்ஸை விளையாட அவர்களை அனுமதிப்பதும்தான்.

அக்கம் பக்கத்தில் இருப்பவர் களுடன் பழகவே தயங்கும் இன்றைய நகர வாழ்க்கையில் குழு விளையாட்டுக்கு குழந்தைகள் எங்கே போவார்கள்? எனவேதான் பள்ளி மாணவ, மாணவியரிடம் இதை எடுத்து செல்லலாம் என்று எண்ணி முதலில் அரசுப் பள்ளி களை அணுகினோம். அவர்கள் நடைமுறைச் சிக்கல் உள்ளது எனக் கூறி பாரம்பரிய விளையாட்டு களைத் தவிர்க்கின்றனர்.

இதையடுத்து தனியார் பள்ளி களில் பாரம்பரிய விளையாட்டு முறை குறித்து எடுத்துக் கூறி செயல்படுத்தி வருகிறோம். பள் ளிக் கல்வித் துறையின் அனுமதி கிடைத்தவுடன் அரசுப் பள்ளிகளி லும் உடற்கல்வி பாடவேளையில் பாரம்பரிய குழு விளையாட்டைக் கற்றுத்தருவோம்.

‘சிறகடித்துப் பறக்க விடுங்கள்’

பெரும்பாலான நகரக் குழந் தைகளுக்கு குழு விளையாட்டு என்றால் என்ன என்பதே தெரிய வில்லை. உடல், மனம், மூளை ஆகியவற்றைப் புத்துணர்வுடன் வைத்திருக்க உதவும் உன்னதமான குழு விளையாட்டுகளைத் தங்களின் குழந்தைகள் விளையாடுவதற்கு, பெற்றோர் அனுமதிக்க வேண்டும். அனைவரும் பங்கேற்கும் குழு விளையாட்டில் மட்டுமே அன்பு, கோபம், ‘கா' விடுதல், ‘பழம்' விடுதல் போன்ற அம்சங்கள் இருக்கும். இயந்திரமயமான உலகில் சிட்டுக்குருவிகளாய் அவர்கள் சிறகடித்துப் பறக்க பெற்றோர் உதவ வேண்டும்.

இவ்வாறு அல்லிராணி பாலாஜி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்