புதுவையில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தால் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி முழு அடைப்புப் போராட்டம் இன்று நடைபெற்றது. புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மறியல் போராட்டம் நடத்தின. இப்போராட்டத்துக்கு முதல்வர் நாராயணசாமி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில், முதல்வர் பங்கேற்ற போராட்டப் புகைப்படத்தை தனது வாட்ஸ் அப்பில் பதிவிட்டு இதுபோன்ற போராட்டத்தால் புதுவையில் கரோனா பரவல் அதிகரிக்கும் என்று ஆளுநர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கிரண்பேடி வெளியிட்ட பதிவில், "இதுபோன்ற சூழ்நிலையைப் பார்க்கும்போது புதுவை யூனியன் பிரதேசத்தில் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கும் என்று தோன்றுகிறது. இதைத் தடுக்க மருத்துவ மற்றும் தடுப்புக் குழுவினர் தயாராக வேண்டும். இது புதுவை மக்களுக்கான முன்னெச்சரிக்கைப் பதிவு மட்டுமே.
» பண்டிகை கால சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
» டிச.14-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்: ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவிப்பு
எனவே, பொதுமக்கள் புதுச்சேரியைப் பாதுகாக்கவும் தங்களைக் காத்துக்கொள்ளவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago