தென்காசி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல்

By த.அசோக் குமார்

மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்தன. தென்காசி மாவட்டத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின. பெரும்பாலான கடைகளும் திறந்திருந்தன.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தென்காசி கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடைபெற்ற போராட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கணபதி, வேல்முருகன், இசக்கிதுரை, அயுப்கான், கண்ணன், லெனின்குமார், கிருஷ்ணன், சங்கரி உட்பட 56 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல், செங்கோட்டை, சங்கரன்கோவில், ஆய்க்குடி, சுரண்டை, கடையம், மருதம்புத்தூர் ஆகிய இடங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 412 பேரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்