“எம்ஜிஆர்போல் நாட்டு நலனுக் கான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார்” என மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
தமிழக பாஜக சார்பில் திருத்தணியில் கடந்த நவ.6-ம் தேதி`வெற்றிவேல் யாத்திரை’ தொடங்கியது. இதன் நிறைவுவிழா திருச்
செந்தூரில் நேற்று நடைபெற்றது. யாத்திரையில் கொண்டு வந்த வேலை, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று முன்தினம் திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் காணிக்கையாக செலுத்தினார். யாத்திரைநிறைவு விழா பொதுக்கூட்டத்தை அங்கு பிரம்மாண்டமான முறையில் நடத்த பாஜக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆனால், காவல் துறையினர் அனுமதி மறுத்ததையடுத்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் இவ்விழா நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்று பேசியதாவது:
பகவான் முருகன் மக்களைக் காக்க அசுரர்களை எப்படி அழித்தாரோ, அதுபோல இந்த வேல் யாத்திரை தமிழகத்தில் இருக்கும் அசுர சக்திகளை அழிக்கும். நாட்டில் உள்ள 135 கோடி மக்களும் நன்றாக வாழ வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் கனவு. எம்ஜிஆரைப் போல நாட்டு மக்களுக்கான நலத்திட்டங்களை அவர் கொண்டு வந்துள்ளார்.
உலகில் வளர்ச்சியடைந்த நாடுகள் கூட கரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியைத் தழுவின. ஆனால், கரோனாவை எதிர்கொள்வதில் பிரதமர் வெற்றி பெற்றுள்ளார். `மோடி’என்று சொன்னாலே `சாத்தியமானது’ என்றுதான் அர்த்தம்.
தமிழகத்துக்கு எண்ணற்ற திட்டங்களை அவர் அளித்துள்ளார். விவசாயிகள் உதவித்தொகை திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம் போன்றவற்றால் தமிழகத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். இதற்குமுன்பிருந்த காங்கிரஸ் அரசு இதுவரை செய்யாத அளவுக்கு, சாகர் மாலா திட்டம், 11 மருத்துவக் கல்லூரிகள், 12 ஸ்மார்ட்சிட்டிகள், மதுரையில் எய்ம்ஸ்,பாதுகாப்பு சார்ந்த தொழில் வழித்தடம் என, பல திட்டங்களை தமிழகத்துக்கு மோடி அரசு தந்துள்ளது. இந்த அரசை, `தமிழர் விரோத அரசு’ என்று எப்படி கூற முடியும்? பிஹாரில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தவர்கள் மூழ்கிப் போனதுபோல் தமிழகத்திலும் அக்கட்சியுடன் கூட்டணிவைப்பவர்கள் மூழ்கிப் போவார்கள். எனவே, திமுக தலைவர் ஸ்டாலின் கவனமாக இருக்க வேண்டும். வருங்காலம் பாஜகவுடையது. இதுகுறித்து கட்சியினர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் இரவு என்பது திமுகவுடையதாக இருக்கலாம். ஆனால் விடியல் எங்களுடையது என்றார்.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேசியதாவது: அசுரர்களை முருகன் சம்ஹாரம் செய்த இடம் திருச்செந்தூர். தீயசக்தியான திமுகவையும், திமுக தலைமையிலான கூட்டணியையும் இந்த காவிக்கூட்டம் ஓடஓட விரட்டும். வேளாண்மை சட்டங்களை பயன்படுத்தி மக்களை திசை திருப்பலாம் என திமுக கனவு கண்டது. ஆனால், தமிழக விவசாயிகளும், விவசாய சங்கத்தினருரும், மத்திய அரசின் விவசாய சீர்திருத்த சட்டங்களை வரவேற்றுஉள்ளனர். வேல் யாத்திரை மூலம் தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய எழுச்சியை பெற்றுள்ளது என் றார். தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக மூத்த தலைவர்கள் இல.கணேசன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், கேசவ விநாயகம், கே.டி.ராகவன், நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், நடிகை குஷ்பு, அண்ணாமலை, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் பேசினர்.
கடும் கட்டுப்பாடுகள்
பொதுக்கூட்டம் நடந்த மண்டபத்துக்குள் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பல மாவட்டங்களிலிருந்து வந்த
பாஜக தொண்டர்கள் மண்டபத்துக்கு வெளியே திரண்டிருந்தனர். ஆங்காங்கே பெரிய திரைகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago