கரோனா விழிப்புணர்வு முன்னேற்பாடுகளுடன் ‘ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு பாபா தரிசன யாத்திரை’ என்ற பெயரில் சிறப்பு சுற்றுலா ரயிலை இயக்க ரயில் வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி, அந்த ரயில் ஜன., 5ம் தேதி நெல்லையில் இருந்து புறப்பட்டு மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர், மந்திராலயம், பண்டரிபுரம் வழியாக ஷீரடி வரை இயக்கப்படுகிறது.
மந்த்ராலயம் குரு ராகவேந்திரர் பண்டரிபுரத்தில் பாண்டுரங்கன், சீரடி சாய்பாபா தரிசனம் ஆகியவை, இந்த ஆறு நாட்கள் சுற்றுலாவில் அடங்கும்.
ரயில் கட்டணம், உணவு, தங்கு மிடம், சுற்றுலா தலங்களில் சாலை வாகன போக்கு வரத்து வசதிகளுடன் நபர் ஒருவருக்கு ரூ. 5,685 கட்ட ணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
» டிசம்பர் 7 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்
» பாஜகவின் வேல் யாத்திரைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு: கட்சியின் மாநிலத் தலைவர் தகவல்
கடந்த நவம்பர் மாதம் கரோனா விழிப்புணர்வு முன் னேற்பாடுகளுடன் தீபாவளி கங்கா ஸ்நானம் ரயில் சுற்றுலா நடத்தப்பட்டது. 480 பயணிகள் பங்கேற்று தீபாவளி திருநாளை காசியில் கொண்டாடி மகிழ்ந்த னர்.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் "பாரத தரிசன சுற்றுலா" என்ற பெயரில் 370-க்கும் மேற் பட்ட ரயில் யாத்திரைகளை வெற்றிகரமாக நடத்தி யுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சுற்றுலாவுக்கு மதுரை ரயில்வே சந்திப்பில் முன்பதிவு செய்யலாம். 10 முதல் 65 வயது வரையிலான நபர்கள் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். விவரங்களுக்கு 8287931977 ஐ தொடர்பு கொள்ளலாம் என, ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago