சிவகங்கை சிறுமியை பார்த்ததே இல்லை: சப்-இன்ஸ்பெக்டர் தகவலால் சிபிசிஐடி குழப்பம்

By எஸ்.ஸ்ரீனிவாசகன்

சிவகங்கை சிறுமி பாலியல் பலாத் கார வழக்கில் கைதான எஸ்ஐ, தான் சிறுமியை பார்த்ததே இல்லை என தெரிவித்த நிலையில், அத்தையும் தலைமறைவானதால் சிபிசிஐடி போலீஸார் குழப் பமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துபாண்டி. இவரது மகளான சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுகுறித்து சிறுமி நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தார். இதில் தந்தை, சகோதரர், போலீஸார் உட்பட 28 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தந்தை முத்துப்பாண்டி, சகோதரர் கார்த்திக், சிவகங்கை நகர் காவல் நிலைய எஸ்ஐ சங்கர், அரசுப் பேருந்து நடத்துநர் நமச்சிவாயம் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தில் மேலும் சில போலீஸாருக்கு தொடர் பிருக்கலாம் என வெளியான தகவலால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. எஸ்ஐ சங்கர், நமச்சிவாயம் ஆகியோரை 3 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர்.

சிறுமியின் பாட்டி, சித்தி ஆகியோரிடம் தனி விசாரணை நடந்தது. இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் தெரிவித்ததாவது: எஸ்ஐ.யிடம் ஐஜி, எஸ்பி உட்பட பலரும் விசாரித்தனர். சிறுமியின் அத்தை தாமரைச்செல்வியை மட்டுமே தெரியும். சிறுமியை யார் என்றே தெரியாது. அவரை பார்த்ததே இல்லை என எஸ்ஐ தெரிவித்துள்ளார். தாமரைச்செல்வியுடன் தனக்கு நல்ல அறிமுகம் உள்ள தாகவும், சிறுமியுடன் எந்த பழக்கமும் இல்லை என நமச்சி வாயம் தெரிவித்தார். மதுரையில் சிறுமி தங்கியதாகக் கூறப்படும் விடுதியில் ஆய்வு நடத்தப்பட்டது.

கண்காணிப்பு கேமிரா பதிவுகள் ஒரு மாதத்துக்கு மட்டுமே இருப்பதால் தடயம் ஏதும் சிக்கவில்லை. சிறுமியை அத்தை தாமரைச்செல்விதான் கொடுமைப்படுத்தியதாகவும், பாலியல் தொந்தரவுகளுக்கு காரணமே அத்தைதான் என பாட்டியும், சித்தியும் தெரிவித்துள்ளனர்.

தனக்கு சிறுமியை யார் என்றே தெரியாது என எஸ்ஐ தெரிவித்து விட்டதால், வேறு அதிகாரிகள் தொடர்பு குறித்து அவரிடம் விசாரிக்க முடியவில்லை.

சிறையில் உள்ள தந்தையிடம் விசாரித்தபோது, பணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் பழிவாங்குவதற்காக தாமரைச்செல்வி சிறுமியை பயன்படுத்தி வழக்கை திசை திருப்பி விட்டார் என தெரிவித்துள் ளார். நீதிபதியிடம் சிறுமி அளித்த ரகசிய வாக்குமூலத்துக்கும், விசாரணையில் கிடைத்த பல தகவல்களும் மாறாக உள்ளன. வழக்கு சிபிசிஐடிக்கு மாறியதும் தாமரைச்செல்வி தலைமறைவாகிவிட்டார்.

சிறுமியிடம் கூடுதல் எஸ்பி மாரி ராஜன், ஆய்வாளர் ஜெனோவா ஆகியோர் காப்பகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி, தாமரைச்செல்வி ஆகியோரிடம் முழுமையாக விசாரித்தால் மட்டுமே இவ்வழக்கின் பின்னணியில் என்ன நடந்தது என்பதை முழுமையாக அறிய முடியும்.

அத்தை தவறு செய்திருந்தால், புகார் அளித்த அவரே குற்றவாளியாக்கப்படுவார். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்