தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளர் 969 காலிபணியிடங்களுக்கான நேர்காணலுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . அதில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான இட ஒதுக்கீட்டில் 196 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருவர் கூட நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை என பண்ருட்டி வேல்முருகன் கணடனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான 969 காலிபணியிடங்களுக்கான நேர்காணலுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . அதில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான இட ஒதுக்கீட்டில் 196 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருவர் கூட நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை.
அப்பட்டியலில், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றாது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ் வழியில் பயின்றோருக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக வழங்கப்பட்டால் மட்டுமே, ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் உதவி காவல் ஆய்வாளர் பணி உள்பட எந்த அரசு பணிகளிலும் சேர முடியும் என்பதை தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எனேவ தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு தமிழ் வழியில் பயின்றவர்களுகான இடஒதுக்கீடு முழுமையாகக் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அதுவரை நேர்முகத்தேர்வு நடைபெறுவதை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது!
» வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நடத்திய வினாடி-வினா போட்டி
தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான 969 காலிபணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் உடற்தகுதி தேர்வு நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, நேர்முகத்தேர்வு என்பது ஒரு இடத்திற்கு 2 பேர் என்றவில் நடப்பது வழக்கமாகும்.
அப்பணியிடங்களுக்கு தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான இட ஒதுக்கீட்டில் 196 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது நேர்காணலுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அப்பட்டியலில், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றாது அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளர் தேர்விலும் இதே போன்ற முறைகேடு நடைபெற்றது. எழுத்துத்தேர்வு, உடற்தகுதித்தேர்வு, நேர்முகத்தேர்வு என்று ஒவ்வொரு நிலையிலும் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்பட்டால் மட்டுமே தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டினை முழுமையாக வழங்க முடியும்.
இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு, தமிழ் வழியில் பயின்றவர்களுகான இடஒதுக்கீடு முழுமையாகக் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அதுவரை நேர்முகத்தேர்வு நடைபெறுவதை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் வழியில் பயின்றோருக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக வழங்கப்பட்டால் மட்டுமே, ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் உதவி ஆய்வாளர் பணி உள்பட எந்த அரசு பணிகளிலும் சேர முடியும் என்பதை தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இவ்விவகாரத்தில் தலையிட தமிழக அரசு அலட்சியம் காட்டும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும். மேலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கையாகவே தெரிவித்துக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago