இலங்கையைக் கடந்த பிறகு தமிழக கடற்பகுதிக்கு வந்த புரெவி புயல் இன்று (சனிக்கிழமை) காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. இருப்பினும், தொடர் சூறாவளி காற்று மற்றும் கனமழையினால் குருசடை தீவில் படகுகள் சேதமடைந்து சில மரங்கள் வேரோடு சாய்ந்தன.
தமிழகத்தில் கடந்த நவம்பர் முதல்வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமாகப் பெய்து வருகிறது. ‘நிவர்’ புயலைத் தொடர்ந்து வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி டிசம்பர் 1அன்று ‘புரெவி’ புயலாக மாறியது.
இலங்கைக்கு கிழக்கே மையம் கொண்டிருந்த புரெவி புயல் புதன்கிழமை இரவு இலங்கையில் திரிகோணமலையைத் தாக்கி கரையைக் கடந்தது. தொடர்ந்து புரெவி புயல் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு நகர்ந்தது.
இந்த புரெவி புயல் பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே கரையைக் கடந்து பின்னர் அரபிக்கடலுக்குச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
» கருப்பாநதி அணையில் 70 மி.மீ. மழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
» புயல் பாதிப்பு குறித்து ஆய்வு; மத்திய குழு வந்தது: நாளை சென்னை, செங்கல்பட்டில் ஆய்வு
ஆனால் இலங்கையைக் கடந்த புரெவி புயல் சற்று திசை மாறி வடமேற்கு நோக்கி பயணித்து வியாழக்கிழமை பாம்பன் அருகே ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டது.
தொடர்ந்து சனிக்கிழமை காலை நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிலுந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக ராமநாதபுரம் அருகே 40 கி.மீ. தூரத்தில் ஒரே இடத்தில் 30 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருவதாகவும் பாம்பன் வழியாக மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து கேரளப் பகுதியை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக நான்காவது நாளாக சனிக்கிழமை ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் கடற்பகுதியில் கனமழை பெய்தது.
தொடர் கனமழை மற்றும் சூறாவளிக் காற்றினாலும் ராமேசுவரம் அருகே உள்ள குருசடை தீவில் உள்ள கட்டங்கள், சுற்றுலா படகு மற்றும் மீனவர்களின் படகுகள் சேதடைந்தன.
சேதங்களை அப்புறப்படுத்தும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவான மழை விவரம்:
அதிகப்பட்சமாக ராமேசுவரம் 111 மி.மீ, மண்டபம் 78 மி. மீ, தங்கச்சிமடம் 72 மி,மீ, பாம்பன் 64மி.மீ, பரமக்குடி 39 மி.மீ, வாலி நோக்கம் 26 மி.மீ அளவும் மழை பெய்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago