தமிழகம்

அத்தி விருட்ச சகஸ்ர ருத்ராட்ச லிங்கம் கோயில் குடமுழுக்கு விழா

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் கூழமந்தல் ஏரிக்கரையில் நட்சத்திர விநாயகர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சங்கர மடத்தின் சார்பில் மடாதிபதி  விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ருத்ராட்சத்தை கொண்டு செய்யப்பட்ட அத்தி விருட்ச சகஸ்ர ருத்ராட்ச லிங்கத்தை வழங்கினார். இந்த லிங்கம் இந்தக் கோயிலில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த அத்தி விருட்ச சகஸ்ர ருத்ராட்ச லிங்கம் கோயிலின் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT