முதல்வர் பழனிசாமி வழங்கிய 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு காரணமாக ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவ கனவு நனவானது என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தி.மலை மாவட்டம் செய்யாறில் நேற்று நடைபெற்றது. இதில், உயர் கல்வித் துறை மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகுத்த அனைத்து திட்டங் களையும் முதல்வர் பழனிசாமி செயல் படுத்தி வருகிறார். குடிமராமத்து பணிகள் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியதில், இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. உணவு உற்பத்தி மற்றும் கல்வியிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
நிதி நெருக்கடி உள்ள சூழ்நிலையிலும், புதிதாக 10 அரசு கல்லூரிகள் தொடங்கப் பட்டுள்ளன. 100-க்கு 28 சதவீதமாக இருந்த உயர்கல்வி, தற்போது 49 சதவீதமாக அதிகரித்துள்ளது. முதல்வர் பழனிசாமியின் நடவடிக்கையால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் அரசுப் பள்ளியில் படித்த 405 மாணவ, மாணவிகள், மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். மேலும், மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்றுள்ளது. ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் கனவு நனவானது.
தமிழக அரசின் திட்டங்களை மக்களி டம் எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பு இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறைக்கு உள்ளது” என்றார்.
விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம்
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தி.மலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு, ஆரணி, வந்தவாசி மற்றும் கலசப்பாக்கம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 2021-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெறும்.
திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய பல்கலைக் கழகம் தொடங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஆராய்ச்சி படிப்பில் ஈடுபடும் மாணவர்கள் பயன்பெறுவார்கள். தமிழகத்தை தாக்கிய புயலுக்கு விவசாய நிலங்கள் அதிகள வில் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்பு குறித்து வேளாண் துறை மற்றும் வரு வாய்த் துறையினர் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படை யில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு விரைவாக நிவாரணம் வழங்கப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago