அதிக கல்விக் கட்டண வசூல்: 2 சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

By செய்திப்பிரிவு

கோவையில் இரண்டு சிபிஎஸ்இ பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மெட்ரிக்குலேஷன் பள்ளியின் இயக்குநர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அப்பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர் நீதிமன்றம் தொடர்ந்தது.

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனத் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்துப் பள்ளிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் 75 சதவீதத்தை வசூலித்துக் கொள்ளலாம் எனவும், அதில் 40 சதவீதம் மற்றும் 35 சதவீதம் என இரு தவணைகளாக வசூலித்துக் கொள்ளவும் அனுமதித்தது.

இந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறிக் கூடுதல் கட்டணம் வசூலித்த 9 தனியார் பள்ளிகளுக்கு எதிராகத் தாமாக முன்வந்து ஏற்கெனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டு பள்ளிகள் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிகள் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், அதிகக் கட்டணம் வசூலிக்கவில்லை எனவும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படியே கட்டணங்கள் வசூலிக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த 9 பள்ளிகள் மீதான வழக்குகளை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

சிபிஎஸ்இ பள்ளிகளைப் பொறுத்தவரை 32 பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார் உள்ளதாகவும், விசாரணையில் கோவை வடவள்ளி மற்றும் கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த பி.எஸ்.பி.பி என்ற பெயர் கொண்ட இரண்டு சிபிஎஸ்இ பள்ளிகள் மீதான புகார் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மெட்ரிக்குலேஷன் பள்ளியின் இயக்குநர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, அந்த இரண்டு பள்ளிகள் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கு தொடர்பாகப் பதிலளிக்க இரு பள்ளிகளுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 8-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்