வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நலன் கருதி 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:
“வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த "புரெவி புயல்" இன்று (3.12.2020), மன்னார் வளைகுடா பகுதியில், பாம்பனுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இப்புயல், 4.12.2020 அன்று அதிகாலையில் பாம்பன் -கன்னியாகுமரிக்கு இடையே, தென்தமிழக கடற்கரையை கடக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு புயல் கரையை கடக்கும் போது, பெரும் மழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புகள் உள்ளன என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் துhத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (4.12.2020) அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கு ஈடாக 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் செயல்படும்.
» தமிழகத்தில் ரஜினிகாந்த் - சசிகலா இடையே தான் போட்டி: சுப்ரமணியன் சுவாமி கணிப்பு
» டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசுக்கு கார்த்தி வலியுறுத்தல்
மேற்கூறிய மாவட்டங்களில், அத்தியாவசிய பணிகள் தவிர, பிற பணிகளுக்கு பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்”.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago