இன்று உலக சேமிப்பு தினம்: பள்ளி மாணவர்களிடையே சேமிப்பை ஊக்குவிக்கும் கல்லூரி மாணவர்கள் - இதுவரை 4,000 சேமிப்புக் கணக்குகள் தொடக்கம்

By கல்யாணசுந்தரம்

நகரங்களில் மட்டுமல்லாது கிராமங் களில்கூட கையில் கிடைக்கும் சொற்ப பணத்தையும் தேவையின் றிச் செலவழிக்க தற்போது ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எளிதாகச் செலவிட்டு வருகிறது இன்றைய இளைய தலைமுறை. இதற்கு காரணம் சேமிப்புப் பழக்கம் குறித்து அறிந்து கொள்ளாததும், அதை பழக்கப்படுத்திக் கொள்ளாததும்தான்.

இந்த நிலையை மாற்றி, சேமிப் புப் பழக்கத்தை மாணவப் பருவத்திலேயே மனதில் பதிய வைத்து, பழக்கப்படுத்துவதன் மூலம் சேமிப்புப் பழக்கம் படிப் படியாக அதிகரிக்கும் என்ற எண் ணத்துடன், 2012-ம் ஆண்டு முதல் கரூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி களில் பயிலும் ஏறத்தாழ 4,000 மாணவர்களுக்கு வங்கிகளில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கி வைத்ததுடன் இதனை ஓர் இயக்க மாகவே நடத்திவருகின்றனர் கரூரில் செயல்பட்டுவரும் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி மாணவர்கள்.

மாணவர்களை இந்த நற்பணி யில் ஈடுபடுத்தி வரும் கல்லூரியின் தாளாளர் கே.செங்குட்டுவன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தற்போதைய காலகட்டத்தில் பிறப்பு முதல் இறப்புவரை பணம் தேவைப்படுகிறது.

2012-ம் ஆண்டு முதல் எங்கள் கல்லூரி மாணவ, மாணவிகளை வைத்து இந்தப் பணியை மேற் கொண்டு வருகிறோம். இதுவரை 40 அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏறத்தாழ 4,000 மாணவர்கள் சேமிப் புக் கணக்குகளைத் தொடங்க உதவி யுள்ளோம்.

முதலில், பள்ளிகளுக்குச் சென்று சேமிப்பின் பயன்களை உணர்த்தும் இரு குறும்படங்களைத் திரையிடு வோம். பின்னர், விரும்பும் மாண வர்களுக்கு தலா ரூ.100-ஐ நாங்களே செலுத்தி வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, கணக்குப் புத்தகத்தை வழங்குவோம். அவர்கள் பணத்தை எடுக்கக்கூடாது என்பதற்காக ஏடிஎம் கார்டு வழங்குவதில்லை.

அந்தந்த பள்ளிகளில் ஒரு ஆசிரி யரை பொறுப்பாளராக நியமித்து, மாணவர்கள் அளிக்கும் சிறு தொகையை வாரந்தோறும் வங்கியில் செலுத்துவதற்கான ஏற் பாடுகளையும் செய்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாணவரின் கணக்கிலும் சேர்ந் துள்ள பணத்தைக் கணக்கிட்டு, அதிகமாகச் சேமித்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு களையும் வழங்கி வருகிறோம்.

மாணவர்கள் தங்களது வங்கிப் புத்தகத்தில் பணம் இருப்பதைப் பார்த்ததும் அவர்களுக்குள் ளாகவே ஒரு தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தங்களது குழந்தை கள் சேமிப்பதைப் பார்த்து பெற் றோர்களும் சேமிக்கத் தொடங்கு கின்றனர். இது அந்த குடும்பத் தையே சேமிப்புப் பழக்கத்துக்கு கொண்டு வருகிறது.

எங்களது இந்தப் பணியை அறிந்த இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரங்கராஜன் டெல்லிக்கு அழைத்துப் பாராட் டினார். அதேபோன்று பாராட்டு தெரிவித்த குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த அப்துல் கலாம் கூறியபோது, “ஏழையாகப் பிறப்பது பாவமல்ல. ஆனால். ஏழையாகவே வாழ்வதுதான் பாவம். இளைய தலைமுறையினரிடம் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் உங்க ளது பணி தொடர்ந்து நடைபெற வேண்டும்” என்றார்.

அதன்படி தொடர்ந்து இந் தப் பணியை மேற்கொண்டு வருகிறோம். பிற மாவட்டங்களிலும் இந்தச் சேவையைக் கொண்டு செல்லவும் தீர்மானித்துள்ளோம்.

கிராம மக்களிடம் விழிப்புணர்வு

மேலும், எங்கள் கல்லூரியில் பயிலும் கிராமப்புற மாணவர்கள் சேமிப்பு பழக்கம், காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்டவைகள் குறித்தும் மக்களிடம் விழிப்பு ணர்வை ஏற்படுத்தி வருகின் றனர். பணம் கையில் இருந்தால் தான் தவறான செயல்களில் ஈடுபடத் தோன்றும். அதைச் சேமிக்கத் தொடங்கிவிட்டால், எதிர்காலம் வள மாகிவிடும் என்றார் செங்குட்டுவன்.

கல்லூரிகள் பாடம் கற்பிப்பது மட்டுமே தங்களது பணி என்று இருக்காமல், சமுதாயத்துக்கு தங்களால் இயன்ற இதுபோன்ற சேவைகளை செய்ய முன்வர வேண்டும் என்ற கருத்துக்கு இக்கல்லூரி சிறந்த உதாரணமாக திகழ்கிறது.

(இத்தாலியில் 31.10.1924-ல் சர்வதேச வங்கி சேமிப்பு முதல் மாநாடு நடைபெற்றதை தொடர்ந்து அந்த நாள் உலக சேமிப்பு நாளாக உலகம் முழுவதும் அனுசரிக்கப் பட்டு வருகிறது. இந்தியாவில் 1984-ம் ஆண்டு வரை அக்.31-ம் தேதியே உலக சேமிப்பு நாளாக அனுசரிக்கப்பட்டு வந்தது. 1984-ம் ஆண்டுக்கு பிறகு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினமும் இதே நாளில் வந்ததால், இந்தியாவில் மட்டும் அக்.30-ம் தேதியை அரசு சேமிப்பு நாளாக அனுசரித்து வருகிறது.)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்