பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படும் என்று வெளியான தகவல்களை அவர் மறுத்தார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அறுதிப் பெரும் பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்படலாம் என்று கடந்து சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு மாநில ஆளுநர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பாக அவர் ‘தி இந்து’விடம் கூறுகையில், “என்னை தொடர்பு கொள்ளும் சிலர், கட்சித் தலைமை என்னை ஆளுநராக நியமிக்கப்போகிறதா என்று கேட்கின்றனர். உண்மையில் ஆளுநர் பதவி என்பது அரசியல் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படுவது. நான் அரசியலில் இன்னும் துடிப்புடன்தான் இருந்து வருகிறேன். இன்றும் தீவிரமாக கட்சிப் பணியாற்றி வருகிறேன். எனக்கு ஆளுநர் பதவி வழங்குவதற்கான முயற்சி எதுவும் நடக்கவில்லை. அப்படியே என்னை அங்கீகரிப்பதாக இருந்தால் தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்படுமே தவிர, இதுபோன்ற முயற்சி எதுவும் நடக்காது” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago