தமிழகத்தில் இன்று புதிதாக 1,428 பேருக்குக் கரோனா; சென்னையில் 397 பேர் பாதிப்பு: 1,398 பேர் குணமடைந்தனர்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் இன்று புதிதாக 1,428 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 84 ஆயிரத்து 747 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 397 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 16 ஆயிரத்து 119 ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று (டிச. 02) வெளியிட்டுள்ள விவரம்:

"தமிழகத்தில் இன்று புதிதாக 1,428 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 897 பேர், பெண்கள் 531 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 84 ஆயிரத்து 747 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 4 லட்சத்து 74 ஆயிரத்து 195 பேர். பெண்கள் 3 லட்சத்து 10 ஆயிரத்து 518 பேர். மாற்றுப் பாலினத்தவர்கள் 34 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 27 ஆயிரத்து 698 பேர். 13-60 வயதுக்குட்பட்டோர் 6 லட்சத்து 56 ஆயிரத்து 25 பேர். 60 வயதுக்கு மேற்பட்டோர்1 லட்சத்து 1,024 பேர் .

இன்று புதிதாக 68 ஆயிரத்து 854 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1 கோடியே 21 லட்சத்து 93 ஆயிரத்து 913.

இன்று புதிதாக 68 ஆயிரத்து 388 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 1 கோடியே 19 லட்சத்து 2,345 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தனியார் மருத்துவமனைகளில் 6 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 5 பேர் என 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 733 ஆக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்த அனைவரும் ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்கள் ஆவர்.

தமிழகம் முழுவதும் தற்போது வரை 10 ஆயிரத்து 999 (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 1,398 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 62 ஆயிரத்து 15 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அரசு சார்பாக 67, தனியார் சார்பாக 154 என, 221 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

சென்னை நிலவரம்

இன்று கரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 397 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 16 ஆயிரத்து 119 ஆக உயர்ந்துள்ளது. இன்று 495 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 8,678 ஆக அதிகரித்துள்ளது. இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 3,857 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை சென்னையில் 3,584 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்".

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்