புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படமாக இயக்குநர் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' திரைப்படம் தேர்வாகி சங்கரதாஸ் சுவாமிகள் விருதினை வரும் 15-ம் தேதி பெறுகிறது.
புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இத்திரைப்பட விழா இந்தியாவிலேயே புதுவையில் மட்டும்தான் 37 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பாண்டுக்கான திரைப்பட விழா டிசம்பர் 15-ம் தேதி அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் நடைபெறுகிறது.
மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து திரைப்பட விழாவை நடத்துகிறது. புதுவை அரசு அத்திரைப்படங்களில் சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்தைத் தேர்வு செய்து விருது வழங்குகிறது. 2019-ல் சிறந்த திரைப்படமாக இயக்குநர் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான இந்த விருதினை இயக்குநர் பார்த்திபனுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வரும் 15-ம் தேதி நடைபெறும் விழாவில் வழங்குகிறார். விருதுக்கான பாராட்டுப் பத்திரத்துடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் விழாவில் தரப்படவுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
» நோலன் போல யாரும் படமெடுப்பதில்லை: ராபர்ட் பேட்டின்சன் பகிர்வு
» திருநம்பியாக மாறிய பிரபல ஹாலிவுட் நடிகை எல்லன் பேஜ்: எலியட் பேஜ் எனப் பெயர் மாற்றம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
6 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago