புதுச்சேரியில் இன்று புதிதாக 53 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (டிச.1) கூறுகையில், "புதுச்சேரி மாநிலத்தில் 3,316 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் மொத்தம் 53 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.65 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 20 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 145 பேர் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 294 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட மொத்தம் 439 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
» தமிழகத்தில் வேளாண் எதிர்ப்புப் போராட்டங்கள் முறியடிப்பு: பாஜக தலைவர் எல்,முருகன்
» கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து புதிய கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பேன்: மு.க.அழகிரி பேட்டி
இன்று 72 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 970 (97.16 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4 லட்சத்து 53 ஆயிரத்து 325 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில், 3 லட்சத்து 64 ஆயிரத்து 43 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.
வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவதால் தொற்று அதிகரிப்பதாகக் கூறுகின்றனர். எனவே, தற்போதுள்ள 294 பேரின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அறிகுறி இருக்கிறதோ, இல்லையோ அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவது நல்லதா? மருத்துவமனைகளில் அனுமதிப்பது நல்லதா? என்பதை யோசித்து முடிவு செய்யப்படும்" என, மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago