ஹைதராபாத் பெயரை பாக்யா நகர் என மாற்ற வேண்டும் என்ற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோரிக்கைக்கு அகில இந்திய சாதுக்கள் சபை ஆதரவு தெரிவித்துள்ளது.
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலை பாஜக முதன்முறை யாக பெரும் சவாலாக எடுத்து பிரச்சாரம் செய்தது. பாஜகவின் முக்கிய பிரச்சாரகரான உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த 28-ம் தேதி ஹைதராபாத்தில் பேசினார்.
அப்போது அவர் தன்னிடம் சிலர் ஹைதராபாத் பெயரை பாக்யா நகர் என மாற்றலாமா எனக் கேட்டதாகவும், அதற்கு அவ்வாறு மாற்ற வேண்டும் என தாம் வலியுறுத்தியதாகவும் கூறினார்.
உ.பி.யில் அலகாபாத், பைஸாபாத் மாவட்டங்களின் பெயர்கள் முறையே பிரயாக் ராஜ், அயோத்யா என மாற்றப் பட்டுள்ளன. இதுபோல் ஹைதரா பாத்தில் பாஜக வெற்றி பெற்றால் இந்நகரின் பெயரும் மாற்றப்படும் என யோகி கூறினார். இது சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் யோகியின் கருத்துக்கு வட மாநிலங்களின் முக்கிய அமைப்பான அகில இந்திய சாதுக்கள் சபை (அகில பாரத அஹாடா பரிஷத்) ஆதரவு தெரிவித்துள்ளது.
முஸ்லிம்கள் வைத்த பெயர்
இது தொடர்பாக இந்த அமைப்பின் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி கூறும்போது, “வட மாநிலங்களில் முஸ்லிம்களால் வைக்கப்பட்ட பெயர்களை நாம் படிப்படியாக மாற்றி வருகிறோம்.
இதுபோல், தென்னிந்தியா விலும் மாற்ற வேண்டும். ஹைதராபாத்தை பாக்யா நகர் என மாற்ற உ.பி. முதல்வர் யோகி கூறிய கருத்துக்கு எங்கள் ஆதரவு உண்டு. நாங்கள் ஹைதராபாத்தின் பெயரைத்தான் மாற்ற வேண்டும்என கோருகிறோமே தவிர ஒவைஸியின் பெயரை அல்ல.சாதுக்கள் சபையின் அடுத்த கூட்டம் பிரயாக் ராஜ் கும்பமேளா வின்போது நடைபெறும். அப்போது இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்றார்.
ஹைதராபாத்தில் பதற்றமான பகுதியாகக் கருதப்படும் சார்மினாருக்கு அருகில் பாக்யலஷ்மி கோயில் உள்ளது. பாஜக தலைவர்கள் அனைவரும் இந்தச் சிறியகோயிலில் தரிசனம் செய்த பின்னரே பிரச்சாரத்தை தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்தக் கடவுளின் பெயரையே ஹைதராபாத் நகருக்கு சூட்டவேண்டும் எனபாஜகவினர் வலியுறுத்தி வருகின் றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago