புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் அடுத்தாண்டு முதல் மாணவர் சேர்க்கை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

By கி.மகாராஜன்

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக்கல்லூரிகளில் அடுத்தாண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல், திண்டுக்கல் உட்பட 11 மாவட்டங்களில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நடப்பாண்டு கலந்தாய்வு பட்டியலில் சேர்க்கக்கோரி மதுரையை சேர்ந்த வாசுதேவா, உயர் நீதிமனற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி,புகழேந்தி அமர்வில் விசரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், தமிழகத்தில் 26 அரசு மருத்துவக்கல்லூரி, 14 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. புதிதாக தொடங்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அடுத்தாண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றார்.

அப்போது நீதிபதிகள், போதுமான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் மருத்துவக் கல்லூரிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டாம்.

பொறியியல் கல்லூரிகளை போல் மருத்துவக் கல்லூரிகளும் அதிகரிக்கும் என்பதால், காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்க வேண்டாம் என்றனர். பின்னர், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்