ராமநாதபுரம் அரசு தொல்லியல் துறையும், சிவகங்கை தொல் நடைக்குழுவும் இணைந்து உலக பாரம்பரிய வாரத்தையொட்டி சிவகங்கை அருகே பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்ட திருமலையில் தொன்மை போற்றும் பாரம்பரியச் சின்னங்கள் அறிதல் நிகழ்ச்சியை நடத்தின.
மதுரை தொல்லியல் அலுவலர் சக்திவேல் தலைமை வகித்தார். தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா முன்னிலை வகித்தார்.
ராமநாதபுரம் காப்பாட்சியர் ஆசைத்தம்பி வரவேற்றார். மதுரை அருங்காட்சியக காப்பாட்சியர் மருதுபாண்டியன் திருமலை குடைவரைக் கோயில் அமைப்பு கட்டுமான கோயில் வரலாறு, அங்குள்ள 32 கல்வெட்டுகள் குறித்து விளக்கினார்.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் ராஜகுரு சமணப்படுக்கை அமைப்பு, தமிழி எழுத்து கல்வெட்டுக்கள் குறித்து விளக்கினார். மேலும் திருமலை தொல்லியல் சின்னங்கள் கையேட்டையும் வெளியிட்டார்.
» மானாமதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி
» விவசாயிகளிடம் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்
தொடர்ந்து திருமலையை தொல்லியல் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க பாடுபட்ட வரலாற்று ஆர்வலர் அய்யனாரை கவுரவிக்கப்பட்டார்.
மன்னர் மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர் சுந்தரராஜன் பாறை ஓவியங்கள் குறித்து பேசினார். தொல்நடைக் குழுவைச் சேர்ந்த கண்ணப்பன் , அனந்தராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago