16 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2021 தொடர்பாக ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் / மண்டல அலுவலரை அணுகுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

“இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் 01.01.2021-ஆம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 2021-ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் 16.11.2020 அன்று வெளியிடப்பட்டது.

மேற்படி வரைவு வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்களின் பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விபரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனவா அல்லது இல்லையா என சரிபார்த்து கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

* வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 01.01.2021 அன்று 18 வயது நிறைவு அடைபவர்கள் (01.01.2003 ஆம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள்) படிவம் 6-னை பூர்த்தி செய்து அளிக்கவேண்டும்.

* பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-னை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

* பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-னை பூர்த்தி செய்து அளிக்கவேண்டும்.

* சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8-Aயினை பூர்த்தி செய்து அளிக்கவேண்டும்.

அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் / பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் 16.11.2020 முதல் 15.12.2020 முடிய உள்ள காலத்திற்குள் விண்ணப்பிக்கவும்.

21.11.2020, 22.11.2020, 12.12.2020 மற்றும் 13.12.2020 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) ஆகிய நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கவும், www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பொதுமக்களுடைய பெயர்களை சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக பெறப்படவுள்ள உரிமை கோரல் மற்றம் ஆட்சேபணைகள் குறித்த படிவங்கள் 6, 7, 8 மற்றும் 3A முறையே படிவம் 9, 10, 11 மற்றும் 11A ஆகியவற்றில் பதியப்பட்டு வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் / மண்டல அலுவலகங்கள் – 4, 5, 6, 8, 9, 10 மற்றும் 13 ஆகிய அலுவலகங்களின் அறிவிப்பு பலகையிலும், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் அவர்களின் இணையதளத்திலும் (http://www.elections.tn.gov.in/SSR2021.aspx) வாரத்திற்கு ஒரு முறை விளம்பரப்படுத்தப்படும்.

இதன் பேரில் ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் / மண்டல அலுவலரை அணுகுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்