புதுச்சேரியில் இன்று புதிதாக 46 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (நவ. 28) கூறும்போது, "புதுச்சேரி மாநிலத்தில் 2,904 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-21, காரைக்கால்-7, மாஹே-18 என மொத்தம் 46 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.
உயிரிழப்பு ஏதும் இல்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 609 ஆக இருக்கிறது. இறப்பு விகிதம் 1.65 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 902 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 194 பேர் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 325 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது வீட்டுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட மொத்தம் 519 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 41 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 774 (96.94 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 3 லட்சத்து 97 ஆயிரத்து 419 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 3 லட்சத்து 56 ஆயிரத்து 234 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago