சிவகங்கை அருகே கண்மாய் நிரம்பியும் மடை இல்லாததால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் 6 ஆண்டுகளாக 100 ஏக்கரில் நெற்பயிர்கள் கருகி வருகின்றன.
சிவகங்கை அருகே கவுரிப் பட்டியில் உள்ள கவுரி கண்மாய் மூலம் 100 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள இக்கண்மாயை 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தூர்வாரவில்லை.
மடையையும் சீரமைக்கா ததால் 6 ஆண்டுகளுக்கு முன், மடை உடைந்து தண்ணீர் முழு வதும் வெளியேறியது.
இதனால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து உடைப்பு ஏற்பட்ட இடத்தில் ஒன்றிய அதிகாரிகள் மண்ணைக் கொண்டு அடைத்தனர். மேலும் அப்போதைய மாவட்ட ஆட்சியர் ராஜாராமன் கண்மாயை தூர்வாரி, மடையைச் சீரமைத்துத் தருவதாக உறுதியளித்தார். ஆனால் சீரமைத்து தரவில்லை.
மேலும் குடிமராமத்துத் திட்டத்தில் காளையார்கோவில் ஒன்றியத்தில் பல கண்மாய்களைத் தூர்வாரிய அதிகாரிகள், இந்தக் கண்மாயை கண்டுகொள்ள வில்லை. அண்மையில் பெய்த மழையில் கண்மாய் முழுவதும் நிரம்பியும், மடை இல்லாததால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. இதனால் நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இதுகுறித்து கவுரிப்பட்டி விவசாயிகள் கூறியதாவது: ஆறு ஆண்டுகளாக கண்மாய் நிரம்பினாலும், மடை இல்லாததால் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் பயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை.
இருந்தாலும் நிலங்களைத் தரிசாக விட மனமின்றி ஆண்டு தோறும் சாகுபடி செய்து வருகிறோம். கண்மாயைத் தூர்வாராவிட் டாலும் பரவாயில்லை. மடையையாவது சீரமைத்துத் தர வேண்டும், என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
14 hours ago