புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு, கோயில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று (நவ. 27) நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது .
அப்போது மனுதாரர் தரப்பில், "கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அமைக்க கோயில் நிலத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பாக கடந்த அக்டோபர் 29-ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கருத்துக் கேட்புக் கூட்டம் நடப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்பே முதல்வர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகள் தொடங்கி விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், 100 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு 1 கோடியே 98 லட்சம் ரூபாய்க்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய மனுதாரர் தரப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் கட்டுமான பணிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கருத்துக்கேட்புக் கூட்டத்தின் அடிப்படையில் கோயில் நிலத்தை அரசுக்கு சொந்தமாக வழங்குவதற்கு பதிலாக குத்தகைக்கு நிலத்தை வழங்க தற்போது அறநிலையத்துறை ஆணையர் பரிந்துரை செய்துள்ளதாகவும், பரிந்துரையின் மீது அரசின் முடிவுக்குக் காத்திருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக டிசம்பர் 9-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர். அதுவரை ஆட்சியர் அலுவலகம் அமைப்பது தொடர்பான பணிகளை நிறுத்தி வைக்கும்படி இடைக்கால உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago