புதுச்சேரி முதல்வர் காரை வழிமறித்த மீனவர்கள்; நலத்திட்டங்கள் கிடைக்கவில்லை எனப் புகார்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் காரை வழிமறித்த மீனவர்கள் நலத்திட்டங்கள் கிடைக்கவில்லை என்று அடுக்கடுக்காகப் புகார்களைத் தெரிவித்தனர்.

புதுவையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் நாராயணசாமி இன்று (நவ.25) ஆய்வு செய்தார்.

கனகசெட்டிகுளம் மீனவப் பகுதிக்கு அவர் சென்று ஆய்வு செய்தார். அவருடன் வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். அங்கு கடலோரப் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த படகுகளைப் பாதுகாப்பாக வைக்க மீனவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அடுத்த பகுதிக்கு முதல்வர் செல்ல முயன்றபோது கனகசெட்டிகுளம் மீனவர்கள் முதல்வரின் காரை வழிமறித்து, "தங்களுக்கு ஏற்கெனவே வழங்க வேண்டிய நிவாரணம் வழங்கவில்லை. மழைக்கால நிவாரணம் வழங்கவில்லை. ரேஷன் அரிசி வழங்கவில்லை" என்று அடுக்கடுக்காகப் புகார்கள் கூறினர்.

இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய முதல்வர், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்