பயிர்காப்பீடு; பிரீமியம் செலுத்த டிச. 31 வரை கால அவகாசம் வழங்குக: முத்தரசன்

By செய்திப்பிரிவு

பயிர்காப்பீடு பிரீமியம் செலுத்த கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (நவ. 25) வெளியிட்ட அறிக்கை:

"நடப்புப் பருவகால சாகுபடிக்கான பயிர் காப்பீடு பிரீமியத் தொகை அறிவிக்கப்பட்டு, அதனை செலுத்த வரும் 30.11.2020 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக எச்சரிக்கப்பட்ட நிவர் புயல் வீசத் தொடங்கியுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக தடுப்பு முன்னேற்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பயிர் காப்பீட்டுக்கான பிரீமியம் செலுத்தும் போது கடுமையான கூட்ட நெருக்கடி ஏற்படுகிறது. பெரும்பகுதி விவசாயிகள் விட்டுப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகள் பிரீமியம் செலுத்தும் நாட்களை நீட்டித்து, டிசம்பர் 31 வரை கால அவகாசம் வழங்க தமிழ்நாடு அரசு காப்பீட்டு நிறுவனங்களுடன் பேசி உரிய உத்தரவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது".

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்