செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட உள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண மையங்களுக்குச் செல்லுமாறு, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி இன்று (நவ. 25) வெளியிட்ட செய்தி வெளியீடு:
"செம்பரம்பாக்கம் ஏரியின் மிகைநீர் இன்று நண்பகல் 12 மணி அளவில் சுமார் 1,000 கன அடி அளவுக்கு வெளியேற்றப்பட உள்ளதால் கானு நகர், சூளைப்பள்ளம், திடீர் நகர், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான் பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் அருகில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி நிவர் புயல் இன்று இரவு வலுவான புயலாக கரையை கடக்கும் நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க தேவையான நிவாரண முகாம்கள் மற்றும் இதர பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியில் தற்பொழுது 22 அடி அளவில் நீர் நெருங்குவதால் இன்று நண்பகல் 12 மணி அளவில் சுமார் 1,000 கன அடி அளவுக்கு உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதாக பொதுப்பணித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, செம்பரம்பாக்கம் ஏரியின் மிகைநீர் அடையாறு ஆற்றின் வழியே கடலில் கலப்பதால் ஆற்றின் இருமருங்கிலும் உள்ள தாழ்வான பகுதியில் உள்ள குறிப்பாக கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் உள்ள கானு நகர், சூளைப்பள்ளம், திடீர் நகர், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான் பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் அருகில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 169 நிவாரண மையங்கள் தற்போது திறக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
இது தொடர்பாக தேவையான விவரங்களை தெரிந்துகொள்ளவும், மழைநீர் தேக்கம் மற்றும் இதர இடர்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்க பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள். 044-25384530, 044-25384540. மற்றும் தொலைபேசி எண்.- 1913-லும், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9445190210 என்ற அலைபேசி எண்ணிலும், வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9445190211 என்ற அலைபேசி எண்ணிலும், ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9445190212 என்ற அலைபேசி எண்ணிலும், அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9445190213 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்".
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago