திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு நவம்பரில் அதிகளவு மழை கிடைக்கப்பெற்றுள்ளது.
மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் 1,614 மி.மீ. மழையும், 2019-ம் ஆண்டு நவம்பரில் 1,581.60 மி.மீ. மழையும் பதிவாகியிருந்த நிலையில், இவ்வாண்டு நவம்பரில் இதுவரை 2,025.70 மி.மீ. மழை பெய்துள்ளது.
முக்கிய பகுதிகளில் இந்த நவம்பரில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம்- 242.80, சேரன்மகாதேவி- 178.40, மணிமுத்தாறு- 245.20, நாங்குநேரி- 223.50, பாளையங்கோட்டை- 312.60, பாபநாசம்- 481, ராதாபுரம்- 169, திருநெல்வேலி- 173.20.
நீர் இருப்பு விவரம்
மாவட்டத்திலுள்ள அணைகளில் நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் விவரம் (அடைப்புக்குள் நீர் இருப்பு சதவீதம்): பாபநாசம் அணை நீர்மட்டம்- 129.10 அடி (84.69 சதவீதம்) சேர்வலாறு- 137.33 அடி (73.60 சதவீதம்), மணிமுத்தாறு- 95.25 அடி (60.96 சதவீதம்), வடக்குபச்சையாறு- 19 அடி (12.99 சதவீதம்), நம்பியாறு- 10.62 அடி (13.05 சதவீதம்), கொடுமுடியாறு- 36 அடி (49.59 சதவீதம்).
பாபநாசம் அணையில் தற்போது 84.69 சதவீத தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதேநாளில் 95.02 சதவீதமும், அதற்கு முந்தைய ஆண்டில் (2018) 76.29 சதவீத தண்ணீரும் இருந்தது. மணிமுத்தாறு அணையில் தற்போது 60.96 சதவீத தண்ணீர் உள்ளது.
கடந்த ஆண்டு இதேநாளில் 32.15 சதவீதமும், அதற்கு முந்தைய ஆண்டில் 68.88 சதவீதமும் தண்ணீர் இருந்தது.
தண்ணீர் திறப்பு
முக்கிய அணைகளில் போதிய அளவுக்கு நீர் இருப்பு உள்ளதால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பாசனத்துக்காக அணை களில் இருந்து கால்வாய்கள் வழியாக தண்ணீர் பெருமளவுக்கு திறக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்: வடக்கு கோடைமேலழகியான் கால்வாய்- 54 கனஅடி, தெற்கு கோடை மேலழகியான் கால்வாய்- 26 கனஅடி, நதியுண்ணி கால்வாய்- 69 கனஅடி, கன்னடி யன் கால்வாய்- 310 கனஅடி, கோடகன் கால்வாய்- 150 கனஅடி, பாளையங்கால்வாய்- 142 கனஅடி, திருநெல்வேலி கால்வாய்- 80 கனஅடி, மருதூர் மேலக்கால்வாய்- 150 கனஅடி, மருதூர் கீழக்கால்வாய்- 156 கனஅடி, ஸ்ரீவைகுண்டம் தெற்கு பிரதான கால்வாய்- 95 கனஅடி, மணிமுத்தாறு பெருங்கால் வாயில் 35 கனஅடி தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது.
அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங் களிலும் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago