மனித உரிமை ஆணையம் சம்மன்: பாபநாசம் அருகே எஸ்ஐ தற்கொலை

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் தினேஷ்குமார்(40). இவர் மெலட்டூர் ஆப்ரஹாம் தெருவில் வசித்து வந்தார்.

கடந்த நவ.20-ம் தேதி மாலை பாபநாசம் அருகே உத்தாணி என்ற இடத்தில் சாலையோரத்தில் வாந்தி எடுத்தபடி நின்றுகொண்டிருந்த இவரை மெலட்டூரை சேர்ந்த சிலர், காரில் ஏற்றிச் சென்று வீட்டில்விட்டனர். மறுநாள் அவர் உடல்நிலை மோசமானது.

தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் அவர் எலி பேஸ்ட் சாப்பிட்டது தெரியவந்தது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து பாபநாசம் போலீஸார் நடத்திய விசாரணையில், தினேஷ்குமார் திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் பணியாற்றியபோது இவர் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் வழக்குத் தொடுத்தார்.இந்த வழக்கு தொடர்பாக கடந்த நவ.20-ம் தேதி நேரில் ஆஜராக மனித உரிமை ஆணையம் இவருக்கு சம்மன் அனுப்பியது. இதனால் மன உளைச்சலுடன் இருந்து வந்த இவர், தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் எலி பேஸ்ட்டை சாப்பிட்டது தெரியவந்தது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்